திருவண்ணாமலை

"மாணவர்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்'

தினமணி

கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும் என்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பா.செந்தில்குமார் கூறினார்.
 திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், முன்னாள் தலைவர் பி.ராமச்சந்திர உபாத்தியாயா, துணைத் தலைவர் ஜி.புல்லையா, இணைச்
 செயலர் டி.ஏ.எஸ்.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பா.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடக்கி வைத்துப் பேசினார். விழாவில், கல்லூரி கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், அறக்கட்டளை உறுப்பினர்கள் டி.கே.பி.கலைமணி, ராஜகுமாரி, சி.சசிகலா, தமிழ்த் துறைத் தலைவர் இரா.சங்கர் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT