ஆரணியில் வழக்குரைஞர் சங்கத் தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றதையொட்டி, ஆரணி நீதிமன்றத்தில்
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றதையொட்டி, ஆரணி நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வழக்குரைஞர்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆரணி நீதிமன்றத்தில் மொத்தம் 87 வாக்குகள் உள்ளன. தேர்தலில் 82 வாக்குகளும் பதிவாகின. இதில், ஆரணி வழக்குரைஞர்கள் தனஞ்செயன், வெங்கடேசன், சிகாமணி ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயல்பட்டனர்.