ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, காந்தி சிலை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்
டி.சீனுவாசன், மாவட்டப் பொறுப்பாளர் கதிர்காமன், மாவட்ட பொருளாளர் பி.சண்முகம், மாவட்ட முன்னாள் சேவாதளத் தலைவர் ஆர்.ஏ.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.