திருவண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி

DIN

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள புளியரம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி, உக்கல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன.
புளியரம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் 10 மாணவிகள் உள்பட 22 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை விஜாய்கிறிஸ்டினாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோல, செய்யாறு அருகே உள்ள உக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 31 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பூபாலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT