திருவண்ணாமலை

மாநில அளவிலான நடனப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

DIN

மாநில அளவிலான நடனப் போட்டியில் வென்ற போளூர் மாணவியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பாராட்டினார்.
"கலா உத்சவ் - 2018' என்ற தலைப்பில் இசை, வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன. 
மாநில அளவிலான போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி நடனப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
இவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெ.அன்பழகன் (மேல்நிலை), எம்.ரேணுகோபால் (இடைநிலை), அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஸ்ரீதர், மாவட்ட கலாஉத்சவ் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சிவராமன், என்.சுமித்ராதேவி ஆகியோர் வியாழக்கிழமை பரிசு வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT