திருவண்ணாமலை

திமுக சார்பில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

DIN

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பிரசாரம், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சவீதா வரவேற்றார்.
இதையடுத்து, எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் வரை எ.வ.வேலு எம்எல்ஏ பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்துப் பயணிகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை எம்எல்ஏ அலுவலகம், கடலைக்கடை சந்திப்பு, காமராஜர் சிலை எதிரில் என நகரின் பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்களை எ.வ.வேலு தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், மாநில தொமுச செயலர் க.சவுந்தரராஜன், மாநில பொறியாளரணி துணைச் செயலர் கு.கருணாநிதி, மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், பெ.சு.தி.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்டப் பிரதிநிதி குட்டி க.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT