திருவண்ணாமலை

டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

DIN

பொது சுகாதாரத் துறை மற்றும் ஆகாரம் கிராமத்தில் உள்ள ஜம்பு மகரிஷி வன்னியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆரணியை அடுத்த திருமணி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின.
பேரணியை நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.எம்.பழனி கொடியசைத்து தொடக்கிவைத்தார். பள்ளி முதல்வர் பாஸ்ராஜ் லோகநாதன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.இளங்கோ, மருத்துவம்சாரா மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சிச் செயலர் வெ.திருமலை, சுகாதார ஆய்வாளர்கள் 
எ.ஆனந்தன், கு.ராஜவேல் ஆகியோர் பேரணியை வழிநடத்திச் சென்றனர். செவிலியர்கள் ஷீலாசந்திரமணி, வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வுப் பேரணி திருமணி கடை வீதி மற்றும் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. இறுதியாக பேரணி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே முடிந்தது. அங்கு பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT