திருவண்ணாமலை

அரசு கேபிள் டி.வி. வயர்கள் சேதம்: 4 பேர் மீது வழக்கு

DIN

செய்யாறு அருகே அரசு கேபிள் டி.வி. வயர்களை சேதப்படுத்தியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த முக்கூர், எரையூர், நேரு நகர் ஆகிய பகுதிகளில் செல்லும் அரசு கேபிள் டி.வி. வயர்களை தொடர்ந்து சேதப்படுத்தியதுடன், அரசு கேபிள் ஒளிபரப்பு சரியாக வராது என்றும், டி.வி. செட்டாப் பாக்ஸ் விரைவில் பழுதாகிவிடும் என்றும் தனியார் கேபிள் டி.வி. நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், கீழ்புதுப்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன் அருகாவூரைச் சேர்ந்த சக்திவேல், யுவராஜ் ஆகியோர் வீண் வதந்தி பரப்பி வந்தனராம். இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. முகவரான செய்யாறு 
ரா.அறிவன்பன் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, 4 பேர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT