மாற்றுத் திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழா
திருவண்ணாமலை, வேங்கிக்கால் கீதபாரதி கலைக்கூடம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு விருது, சான்றுகள் வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் கீதபாரதி கலைக்கூடம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு விருது, சான்றுகள் வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு கீதபாரதி கலைக்கூட இயக்குநரும், இசை ஆசிரியருமான கி.பாரதி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். குறும்பட இயக்குநர் ஏ.ஷபி வரவேற்றார். தொழிலதிபர் ஆகாஷ் எஸ்.ஆர்.முத்துகிருஷ்ணன் விழாவை தொடக்கி வைத்துப் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள், சான்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, தொழிலதிபர் ஆகாஷ் எஸ்.ஆர்.முத்துக்கிருஷ்ணன் பேசினார். விழாவில், சார்பு நீதிபதி ராஜ்மோகன், இசை ஆராய்ச்சியாளர் இரா.காசி விஸ்வநாதன், மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிறுவனர் ஏ.வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலர் என்.குமார், மாவட்டத் தலைவர் டி.முருகேசன், மா.ரவி, இரா.ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.