திருவண்ணாமலை

ஆரணியில் குப்பைக் கிடங்கை இடித்துத் தள்ளிய பொதுமக்கள்

DIN

ஆரணியில் கட்டப்பட்ட குப்பைக் கிடங்கை அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இடித்துத் தள்ளினர்.
ஆரணி நகராட்சி சார்பில் கே.பி.கே.நகரில் மக்கும்-மக்காத குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதைப் பொருள்படுத்தாத நகராட்சி நிர்வாகம் அங்கு குப்பைக் கிடங்கை கட்டும் பணிகளை தொடக்கியது. மேலும், எதிர்ப்பு கிளம்பியபோது,  நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று சமரசம் செய்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை இரவு அந்தக் குப்பைக் கிடங்கை பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். இதையடுத்து,  நகராட்சி ஆணையர் அசோக்குமார் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT