திருவண்ணாமலை

தென்னிந்திய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர்கள் பாராட்டு

DIN


தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருவண்ணாமலை பள்ளி மாணவியை அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கு.தங்கமணி ஆகியோர் பாராட்டினர்.
தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் ஆந்திர மாநிலம், குண்டூரில் அண்மையில் நடைபெற்றன. இதில், 18 வயதுக்கு உள்பட்டோருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.ஹேமலதா கலந்து கொண்டு முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் கு.தங்கமணி, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், பள்ளிச் செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார்,
ஆங்கில வழிச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ் வழிச் செயலர் வி.சுரேந்திரகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் என்.ஆர்.மணி, உடல் கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் மற்றும் அறக்கட்டளை
உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT