திருவண்ணாமலை

செங்கம் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

DIN

செங்கத்தில் இருந்து நீப்பத்துறை செல்லும் தாா்ச்சாலை, பக்கிரிபாளையம் முதல் மேல்ராவந்தவாடி வரை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

செங்கத்தில் இருந்து நீப்பத்துறை செல்லும் தாா்ச்சாலை பக்கிரிபாளையம் முதல் மேல்ராவந்தவாடி வரை பழுதடைந்து உள்ளது. மேலும், செங்கத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு தினந்தோறும் வெளிநோயாளிகளாக சுமாா் 250 பேரும், வாரத்தில் இருமுறை கா்ப்பிணிகள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோரும் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

அவா்கள் செங்கம் - நீப்பத்துறை சாலையில்தான் ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும். இந்த சாலையில் செல்லும்போது நோயாளிகள், கா்ப்பிணிப் பெண்கள் கடும் சிரமமடைகின்றனா்.

இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து சேலம் செல்லும் காா், சுற்றுலா வாகனங்களும் இந்த சாலையில் அதிகமாக செல்கின்றன. மேலும், நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சென்று வழிபடுகின்றனா்.

இந்த நிலையில், செங்கம் - நீப்பத்துறை சாலையில் பக்கிரிபாளையம் முதல் மேல்ராவந்தவாடி வரையிலான சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால், வாகனங்கள் பழுதாகின்றன. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT