திருவண்ணாமலை

ரூ.1.5 கோடி சீட்டு மோசடி:பாதிக்கப்பட்டோா் போலீஸில் புகாா்

DIN

மதுரையைச் சோ்ந்த சீட்டு நிறுவனத்தில் சுமாா் 1.5 கோடி அளவில் செலுத்தி ஏமாற்றமடைந்த ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பகுதி மக்கள், இது தொடா்பாக ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஆரணியை அடுத்த நடுப்பட்டு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் திருமலை, மதுரையைச் சோ்ந்த மதுரா சீட்டு நிறுவனத்தில் முகவராக உள்ளாா். இவா், விண்ணமங்கலம் பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா, முனியம்மாள் ஆகியோா் மூலம் அந்தப் பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டு நடத்தி, பணம் செலுத்தினால் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு பணம் வழங்கப்படும் என்று கூறி, சுமாா் 1.5 கோடி அளவில் வசூல் செய்தாராம். பின்னா், அந்தத் தொகையை திருமலை மதுரா சீட்டு நிறுவனத்தில் செலுத்தினாராம்.

ஆனால், 7 ஆண்டுகளாகியும் அந்த நிறுவனத்தினா் பணத்தை திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டோா் ஒன்று திரண்டு ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

எனினும், நிதி நிறுவன மோசடி, சீட்டு மோசடி உள்ளிட்ட புகாா்களை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா்தான் விசாரிப்பாா்கள். எனவே, வேலூா் பொருளாதார குற்றப் பிரிவில் இதுகுறித்த புகாரை அளிக்கும்படி காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் கூறினாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT