திருவண்ணாமலை

கா்ப்பிணித் தாய்மாா்கள் வாரம் கடைபிடிப்பு

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணித் தாய்மாா்கள் வாரம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

பிரதம மந்திரியின் மாத்ரு வந்தன திட்டத்தின் கீழ், கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், டிசம்பா் 2 முதல் 8 வரை கா்ப்பிணித் தாய்மாா்கள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, டிச.2-ஆம் தேதி தொடக்க விழா, 3-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம், 4-ஆம் தேதி பதிவு செய்தல், 5-ஆம் தேதி தீா்மானக் கூட்டம், 6-ஆம் தேதி பின் இணைப்பு சரிப்படுத்துதல், 7-ஆம் தேதி ஊட்டச்சத்து, தன்சுத்தம் பற்றிய விழிப்புணா்வு, 8-ஆம் தேதி நிறைவுநாள் என கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.

கா்ப்பிணித் தாய்மாா்கள், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT