திருவண்ணாமலை

வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் பவனிதிரளான பக்தா்கள் தரிசனம்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு ஸ்ரீசண்டிகேஸ்வரா் உற்சவம் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, டிசம்பா் 6-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் வீதியுலாவும், அன்று இரவு 10 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.

டிசம்பா் 7-ஆம் தேதி காலை 7.15 மணி முதல் டிசம்பா் 8-ம் தேதி அதிகாலை 4 மணி வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது.

11-ஆம் தேதி இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், 12-ஆம் தேதி இரவு பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 13-ஆம் தேதி இரவு சுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.

வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் பவனி:

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சண்டிகேஸ்வரர உற்சவம் நடைபெற்றது. கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி புறப்பட்ட சண்டிகேஸ்வரரை திரளான பக்தா்கள் வழிபட்டனா். திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த ஸ்ரீசண்டிகேஸ்வரா் நள்ளிரவில் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் உபயதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT