திருவண்ணாமலை

2,029 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினார்

DIN

புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 2,029 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காஞ்சி, காரப்பட்டு, பனைஓலைப்பாடி, புதுப்பாளையம் ஆகிய அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுப்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி தலைமை வகித்தார். புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மீனாகுமாரிபுருசோத்தமன், கூட்டுறவு சங்கத் தலைவர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 274 மாணவர்கள், பெண்கள் பள்ளியைச் சேர்ந்த 274 மாணவிகள், காரப்பட்டு பள்ளியைச் சேர்ந்த 447 மாணவர்கள், பனைஓலைப்பாடி பள்ளியைச் சேர்ந்த 176 மாணவர்கள், புதுப்பாளையம் பெண்கள், ஆண்கள் பள்ளிகளைச் சேர்ந்த 850 மாணவ, மாணவிகள் என மொத்தம் 2,029 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் காஞ்சி பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT