திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்காலிக மேம்பாலங்கள் அமைக்க ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்காலிக மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆய்வில் தனியார் நிறுவனத்தினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்காலிக மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆய்வில் தனியார் நிறுவனத்தினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரிசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
இந்த நிலையில், கிரிவல நாள்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கிரிவலப் பாதையின் சில இடங்களில் தற்காலிக மேம்பாலங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் முடிவு செய்துள்ளன.
அதன்படி, எந்தெந்த இடங்களில் தற்காலிக மேம்பாலங்கள் அமைப்பது என்பது குறித்த ஆய்வில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இதற்காக பறக்கும் கேமராவை (ஹெலிகேம்) தரையில் இருந்து உயரத்துக்குப் பறக்கவிட்டு விடியோ காட்சிகளை பதிவு செய்தனர்.