இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் பரபரப்பை எட்டியிருக்கும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை மாலை ஹடாசா ஐன் கெரெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
76 வயதாகும் பிரதமர் நெதன்யாகு பெஞ்சமின் உடல்நிலை தொடர்பாக பொதுமக்களிடையே அரசு மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த மாதம் அறிக்கை ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார்.
அதில், புராஸ்டேட் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
மேலும், தனது உடல்நிலைக் குறித்த தகவலை ஈரான் போர்ப் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற காரணத்தால், இவ்வளவு நாள் இதனை மறைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், ஹதாசா மருத்துவமனையில் நெதன்யாகுவுக்கு புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னதாக, 2023 ஜூலையில் நெதன்யாகுவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவைச் சிகிச்சையும், 2024 மார்ச்சில் குடல் இறக்க அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Israeli Prime Minister Netanyahu Admitted to Hospital!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.