முகப்பு
திருவண்ணாமலை

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ நிதியுதவி

செய்யாறு அருகே தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ தூசி கே.மோகன் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.

Updated On : 23 ஜனவரி 2019, 9:51 am IST
பகிர்:

செய்யாறு அருகே தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ தூசி கே.மோகன் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
செய்யாறு வட்டம், மேல்மா கிராம காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்குச் சொந்தமான குடிசை வீடு மின் கசிவு காரணமாக, கடந்த 8-ஆம் தேதி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. 
இதனையறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், அரிசி, வேட்டி, சேலை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி, ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியின்போது, முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், வட்டாட்சியர் க.மகேந்திரமணி, வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் பிரபா, 
அதிமுக நிர்வாகிகள் எம்.கே.கார்த்திகேயன், ராஜமாணிக்கம், கோதண்டன், சாந்தகுமார் 
ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.