முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி பூங்குயில் பதிப்பகம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 9:51 am IST
பகிர்:

வந்தவாசி பூங்குயில் பதிப்பகம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ரா.சரவணன், வந்தவாசி அரிமா சங்க முன்னாள் தலைவர் பெ.எட்டியப்பன், கோ.பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
தொல்லியல் துறை காப்பாட்சியர் அ.ரஷீத்கான் வந்தவாசி போர் குறித்து சிறப்புரை ஆற்றினார். சேதமடைந்துள்ள வந்தவாசி கோட்டையை புனரமைத்து, பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூங்குயில் சிவகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.