திருவண்ணாமலை

வந்தவாசி நகரில் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு

DIN

வந்தவாசி நகரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வந்தவாசி நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட வந்தவாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சந்நிதி பள்ளி, ஆர்.சி.எம். பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளி, கிழக்கு, வடக்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் 25 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களில் கட்டடம், மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டார். மேலும், தேவைப்படும் அத்தியாவசிய வசதிகளை உடனடியாக செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அப்போது, நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் மணி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT