திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஆரணி 2-ஆம் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

DIN

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான 2-ஆம் நாளான புதன்கிழமை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
 தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன.
 இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிதன் (50) வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமை திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT