திருவண்ணாமலை

வாக்கு இயந்திரங்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கியது போளூர் சட்டப் பேரவைத் தொகுதி. இந்தத் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகள் உள்ளன.
 இவற்றுக்குத் தேவையான வாக்கு இயந்திரங்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அண்மையில் வந்து இறங்கின.
 இந்த இயந்திரங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து "சீல்' வைத்துள்ளனர். இந்த அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதுடன், இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT