திருவண்ணாமலை

ரூ.1500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

DIN

வந்தவாசி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியை (57) ஊழல் தடுப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கபாலி (59). இவர் வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அதியனூரில் சுமார் 1.5 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். இதற்கு மின் இணைப்பு பெற, தடையில்லா சான்று கோரி அதியனூர் கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியை கபாலி அணுகினார். ரூ.1500 லஞ்சம் கொடுத்தால்தான் சான்று தரமுடியும் என்று அப்பாசாமி தெரிவித்தாராம்.
 இதுகுறித்து கபாலி திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கபாலியிடம் கொடுத்து அதை அப்பாசாமியிடம் கொடுக்குமாறு ஊழல் தடுப்பு போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதியனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியிடம் கபாலி ரூ.1500 லஞ்ச பணம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான ஊழல் தடுப்பு போலீஸார் அப்பாசாமியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT