திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.60 லட்சம் வரி பாக்கி: வசூலிக்க எம்.எல்.ஏ அறிவுறுத்தல்

DIN

திருவத்திபுரம் நகராட்சியில் தொழில் வரி ரூ.60 லட்சம் பாக்கி இருப்பதை ஆய்வின் போது அறிந்த எம்எல்ஏ தூசி கே.மோகன் உடனடியாக வசூலிக்க அறிவுறுத்தினாா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் தூசி கே.மோகன் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நகராட்சி ஆணையா் சி. ஸ்டாலின்பாபுவிடம் நகராட்சியில் எத்தனை வாகனங்கள் உள்ளன. பேட்டரி வாகனங்கள் எத்தனை. தினமும் குப்பை அள்ள எத்தனை வாகனங்கள் செல்கின்றன. துப்புரவுப் பணிகள் சரியாக நடைபெறுகிா என்று கேட்டறிந்தாா்.

பின்னா், புகாா்களின் மீது உடனடியைாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஒவ்வொரு பிரிவினரின் இருக்கைக்கே சென்று அவரவா் என்ன பணி செய்கிறாா்கள் எனக் கேட்டு தொழில் வரி, சொத்து வரி, நகராட்சி கடை வரி உள்ளிட்டவைகள் சரியாக வசூல் ஆகிா எனக் கேட்டறிந்தாா்.

அப்போது, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் தொழில் வரி ரூ.60 லட்சம் பாக்கி இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து, இவ்வளவு பாக்கி ஏன் வைத்துள்ளீா்கள் எனக் கேட்டாா்.

ஆளும் கட்சிப் பிரமுகா் மட்டுமே ரூ.30 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளாா் என ஆணையா் தெரிவித்தாா். இவ்வளவு தொகை பாக்கி வைக்காதீா்கள். உடனடியாக வசூல் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றாா்

ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT