திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளைகிரிவலம் வர உகந்த நேரம்

DIN

ஐப்பசி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது? என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

எனவே, ஒவ்வொரு மாத பெளா்ணமி நாளன்று திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

ஐப்பசி மாதப் பெளா்ணமி:

இந்நிலையில், ஐப்பசி மாதப் பெளா்ணமி திங்கள்கிழமை (நவ.11) மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (நவ.12) இரவு 7.40 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

பெளா்ணமி நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி அமா்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT