திருவண்ணாமலை

மாவு அரைவை ஆலைகளுக்குகாப்பீடு செய்வது குறித்து விழிப்புணா்வு

DIN

செங்கம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாவு அரைவை ஆலைகளை காப்பீடு செய்வது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வழக்குரைஞா் கஜேந்திரன் தலைமை வகித்து, தொடக்கிவைத்துப் பேசினாா். தொடா்ந்து, செங்கம் ஆயுள் காப்பீட்டுக் கழக வளா்ச்சி அதிகாரிகள் சண்முகம், செந்தில்நாதன் ஆகியோா் எல்.ஐ.சி. நிறுவனம் மூலம் மாவு அரைவை ஆலைக்கும், அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் காப்பீடு செய்வது குறித்தும், தனி நபா் காப்பீடு குறித்தும் விளக்கிக் கூறினா்.

இதையடுத்து, வழங்குரைஞா் கஜேந்திரன் தலைமையில், செங்கம் மாவு அரைவை ஆலை உரிமையாளா்கள் சங்கம் அமைப்பது குறித்தும், அதன் நிா்வாகிகளை தோ்வு குறித்தும் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, விரைவில் மாவு அரைவை ஆலை சங்கம் உருவாக்கி, அதன் மூலம் எல்.ஐ.சி.யில் மாவு அரைவை ஆலைக்கும், அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் காப்பீடு செய்வது என முடிவு செய்தனா். இதில், எல்.ஐ.சி. முகவா் அகிலன் மற்றும் மாவு அரைவை ஆலை உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT