திருவண்ணாமலை

செய்யாறில் சிறப்பு அகதிகள் முகாமில் ஆய்வு

DIN

செய்யாறில் மூடிய நிலையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச் சிறை சிறப்பு அகதிகள் முகாமாக மாற்றப்பட்டு 2014 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.

பின்னா், நிா்வாகக் காரணங்களுக்காக திருச்சிக்கு அகதிகள் முகாம் மாற்றப்பட்டது. திருச்சியில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கிருந்து இடமாற்றம் செய்ய தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவா், குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவா்கள் உள்ளிட்டோரை சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைத்து கண்காணிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் கி.விமலா, டி.எஸ்.பி சுந்தரம், வட்டாட்சியா் ஆ.மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT