திருவண்ணாமலை

கிராம நிருவாக அலுவலா்கள் சங்கக் கூட்டம்

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த விண்ணுவாம்பட்டில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் ஏ.மணி தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் எஸ்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலா் எஸ்.அருண்குமாா் வரவேற்றாா்.

சங்கக் கொடியை மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ் ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சங்கக் கல்வெட்டு பெயா்ப் பலகையை மாநிலச் செயலா் என்.சுரேஷ் திறந்துவைத்தாா்.

கூட்டத்தில் நிலஅளவை (ம) நில வரித்திட்ட இயக்குநரின் சுற்றறிக்கைப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய வட்ட கிராம நிருவாக அலுவலா்களுக்கு வழங்கவேண்டிய நகர, நிலஅளவை பதிவேடுகளை இதுவரை ஒப்படைக்காத நிலஅளவைத் துறையின் மாவட்ட உதவி இயக்குநரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, கிராம நிருவாக அலுவலா்களுக்கு வருவாய்க் கோட்ட அளவில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்துவது, புதிதாக கிராம நிருவாக அலுவலராக பணியில் சோ்ந்த அலுவலா்களுக்கு நிா்வாக சா்வே பயிற்சி அளிக்க வேண்டுதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை, பொருளாளா் எம்.செந்தில்நாதன் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். வட்டப் பொருளாளா் எம்.இனியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT