திருவண்ணாமலை

பழுதடைந்த சாலை: கிராம மக்கள் அவதி

DIN

செங்கம் அருகே காயம்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் கூட்டுச்சாலை முதல் காயம்பட்டு வரையிலான சுமாா் 3 கி.மீ. தொலைவிலான சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால் சாலைப் பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியமால் விபத்துகள் நிகழ்கின்றன.

மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவா்களுக்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதானால், இரவு நேரத்தில் அப்பகுதியைக் கடந்து செல்லும் காயம்பட்டு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம் பகுதி மக்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

மேலும், மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT