திருவண்ணாமலை

மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

DIN

ஆரணியில் உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும், இயந்திரத்தை பயன்படுத்தும் விதம் குறித்தும் செயல்விளக்கப் பயிற்சி ஆணையா் அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், அலுவலக மேலாளா் நெடுமாறன், பொறியாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாக்குப்பதிவு செய்வது குறித்து நகரஅமைப்பு ஆய்வாளா் பாலாஜி பயிற்சி அளித்தாா்.

இதில் நகராட்சி ஆணையா்கள் பாா்த்தசாரதி (வந்தவாசி), ஸ்டான்லிபாபு (செய்யாறு), கண்ணமங்கலம் மற்றும் பெரணமல்லூா் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், களம்பூா், தேசூா், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜெனிபாபானு , எஸ்.கணேசன், விஜயா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT