திருவண்ணாமலை

9 லட்சம் பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

DIN

 திருவண்ணாமலை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் சார்பில்,  ரூ.36 லட்சம் செலவில்  9 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
 தமிழக முதல்வர் கடந்த ஜூலை 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படும். 
இதற்காக முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். பின்னர், பனை விதைகள் நடும் பணி தொடங்கி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 
பின்னர், ஆகஸ்ட்  20-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கிவைத்தார். 
இதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.36 லட்சம் செலவில் 9 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், ஆரணியை அடுத்த முள்ளண்டிரம், ஆலந்தாங்கல் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டங்களில், வட்டத்துக்கு 5 கிராமங்களை தேர்வு செய்து, கிராமத்துக்கு 1000 பனை விதைகள் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். 
ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, அதிமுக ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணைத் தலைவர் பாரிபாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், வேளாண்மைத் துறை கூடுதல் இணை இயக்குநர் ராஜசேகர், இணை இயக்குநர்கள் ரமணன், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT