திருவண்ணாமலை

மளிகைக் கடையில் மது விற்பனை: முதியவர் கைது 

DIN

வந்தவாசி அருகே மளிகைக் கடையில் மது விற்பனை செய்த முதியவரை டிஎஸ்பி தங்கராமன் கைது செய்தார்.
வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி டிஎஸ்பி தங்கராமனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லுங்கி அணிந்தும், தலையில் துண்டு கட்டிக் கொண்டும் மாறுவேடத்தில் அந்த கடைக்கு சனிக்கிழமை சென்ற வந்தவாசி டிஎஸ்பி தங்கராமன், மதுப் புட்டி கேட்டார். 
அப்போது கடை உரிமையாளரான ஏழுமலை (74), ரூ.150-ஐ டிஎஸ்பி தங்கராமனிடம் பெற்றுக் கொண்டு மதுப் புட்டி கொடுத்தார். இதையடுத்து, ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்த டிஎஸ்பி தங்கராமன், அந்தக் கடையிலிருந்து 3 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தார். 
பின்னர் ஏழுமலையை தேசூர் போலீஸில் அவர் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT