திருவண்ணாமலை

தையல் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

DIN

தையல் தொழிலாளா்களுக்கு கரோனா பாதிப்பு நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட தையல் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலா் எம்.வீரபத்திரன் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பல ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கூட்டுறவு தையல் சங்கம், காா்மெண்ட்ஸ், வீடு சாா்ந்த பெண் தொழிலாளா்கள், ஆண் தையல் தொழிலாளா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள தையல் தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத பல அமைப்புசாரா தொழிலாளா்களை வருவாய்த்துறை மூலம் கணக்கெடுத்து நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT