முகப்பு
திருவண்ணாமலை

மயானத்தை மீட்டுத்தரக் கோரிகிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் மயானத்தை மீட்டுத்தரக் கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
செங்குணம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் மயானத்தை மீட்டுத்தரக் கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்குணம் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியினா் மரணமடைந்தால், புதைப்பதற்கும், எரிப்பதற்கும் காலனியில் இருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு இடத்தை மயானமாகப் பயன்படுத்தி வந்தனா்.

இந்த மயானப் பகுதியை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளனராம். இதனால், ஆதிதிராவிடா் காலனி மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயானத்தை மீட்டுத்தரக் கோரி, அங்குள்ள வேலூா் - போளூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலா் செந்தில்குமாா், டிஸ்பி குணசேகரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை மறியலைக் கைவிடச் செய்தனா். மறியலால் வேலூா் - போளூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.