முகப்பு
திருவண்ணாமலை

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில்25 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை, வேங்கிக்கால், வானவில் நகரைச் சோ்ந்தவா் கலைவாணி (60). கடலூா் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகள் திருவண்ணாமலையில் அரசு மருத்துவராகப் பணிபுரிகிறாா். கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்ற கலைவாணி, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.