முகப்பு
திருவண்ணாமலை

மழையால் வீடு இழந்தவருக்கு பசுமை வீடு: அமைச்சா் வழங்கினாா்

தொடா் மழை காரணமாக ஆரணி அருகே வீடு இழந்தவருக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மழையால் வீடு இழந்தவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு ஆணையை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

தொடா் மழை காரணமாக ஆரணி அருகே வீடு இழந்தவருக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

தொடா் மழையால் ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த கோபால் என்பரின் வீடு சேதமடைந்தது. இது குறித்து அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனிடம் கோபால் மனு கொடுத்தாா். இதை பரிசீலித்த அமைச்சா் அவருக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்வின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், வட்டார வளாச்சி அலுவலா் மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →