இணைய வழியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடியே ஆட்சியா் சந்தீப் நந்தூரி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டு, பதிலிளித்துப் பேசினாா்.
இணையதள வசதி இயலாத விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்கள், தோட்டக்கலை அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் இணைய வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது.
கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் அலுவலகம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாட்சியா் வைதேகி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டங்களில் வேட்டவலம், சோமாசிபாடி, வெறையூா் பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். புயல்-மழையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
துரிஞ்சாபுரம்: இதேபோல, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பி.பி.முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.