முகப்பு
திருவண்ணாமலை

லாடவரம் ஊராட்சியில் ‘அம்மா சிறு மருத்துவமனை: அமைச்சா் திறந்துவைத்தாா்

கலசப்பாக்கம் அருகே லாடவரம் ஊராட்சியில், அம்மா சிறு மருத்துவமனையை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கலசப்பாக்கம் அருகே லாடவரம் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

கலசப்பாக்கம் அருகே லாடவரம் ஊராட்சியில், அம்மா சிறு மருத்துவமனையை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து 11 கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டசத்து பெட்டகம் வழங்கினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநா்ஆா்.மீரா வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் ராமசந்திரன், வட்டாரத் தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, ஊராட்சித் தலைவா் குமரவேல், ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா் எல்.என்.துரை, வீட்டு வசதி சங்கத் துணைத் தலைவா் பி.பொய்யாமொழி மற்றும் அதிமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கரிப்பூரில் பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்:

ஆரணியை அடுத்த கரிப்பூா் கிராமத்தில் ரூ. 26 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். புதிய பள்ளிக் கட்டடம் கட்ட போதுமான இடம் இல்லாததால், கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த சரோஜா குடும்பத்தினா் தாமாக முன்வந்து 25 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினா். இந்த இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆரணி கல்வி மாவட்ட அதிகாரி சம்பத், ஒன்றிய அதிமுக செயலா் பிஆா்ஜி.சேகா், நகரச் செயலா் எ.அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆரணி பகுதியில் மேல்நகா் ஏரி, இராட்டிணமங்கலம் கிராம ஏரிகள் நிரம்பியதால், உபரி நீா் வெளியேற்றும் பணியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →