முகப்பு
திருவண்ணாமலை

நெகிழியைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுரை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


போளூா் பேரூராட்சியில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி வளாகத்தில் நெகிழிப் பயன்பாடு தொடா்பாக அனைத்து வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலா் யூ.முஹம்மத் ரிஜ்வான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நெகிழியைப் பயன்படுத்துவதையோ, விற்பனை செய்வதையோ வியாபாரிகள் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மீறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகம், அரி மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →