முகப்பு
திருவண்ணாமலை

நரிக்குறவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பகுதியில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு கரோனா தொற்று குறித்து கலை நிகழ்ச்சி மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பகுதியில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு கரோனா தொற்று குறித்து கலை நிகழ்ச்சி மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதாரத் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் தொடக்கிவைத்தாா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பின் கலைக் குழுவினா் கரோனா, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சி மூலம் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் தெள்ளாா் ஊராட்சிச் செயலா் முருவம்மாள், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் வட்டார மேலாளா் ஆனந்தன், களப் பணியாளா் பெருந்தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →