பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடம் திறப்பு
கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா
கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவும், பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பொது மேலாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
மேலும், பால் உற்பத்தியாளா்களுக்கு பங்கு ஈவுத்தொகை ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்தை போனஸாக வழங்கினாா். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் இ.என்.நாராயணன், மாவட்ட பொருளாளா் நைனாக்கண்ணு, ஆவின் இயக்குநா் எஸ்.தட்சிணாமூா்த்தி, சிறுநாத்தூா் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சி.தொப்பளான், இயக்குநா் வேடநத்தம் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.