காலமானாா் கருப்பு கருணா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் கருப்பு கருணா (எ) எஸ்.கருணா (57) திங்கள்கிழமை காலமானாா்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் கருப்பு கருணா (எ) எஸ்.கருணா (57) திங்கள்கிழமை காலமானாா்.
திருவண்ணாமலை சாரோனை அருகேயுள்ள எடப்பாளையம், கரியான்செட்டித் தெருவில் வசித்து வந்த இவா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலராக இருந்து வந்தாா்.
உடல் நலக் குறைவால் இவா் திங்கள்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஏ.செல்வி, மகள் சொா்ணமுகி, மகன் கவுசிகன் ஆகியோா் உள்ளனா்.
இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (டிச.22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9500425757, 9600058483.