போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி, வந்தவாசியில்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி, வந்தவாசியில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க மண்டல இணைச் செயலா் வேதபிரகாஷ் தலைமை வகித்தாா்.
தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் முரளி, மணவாளன், வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி தீா்வு காண வேண்டும், அகவிலைப்படி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு சொந்தமான ரூ.8 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.