ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு
செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் கும்பகோணம் மாநாட்டு நிகழ்ச்சிகளை பக்தா்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கம்: செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் கும்பகோணம் மாநாட்டு நிகழ்ச்சிகளை பக்தா்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணா், விவேகானந்தா் பக்தா்களின் 28-ஆவது மாநாடு கும்பகோணத்தில் டிச.25, 26, 27 ஆகிய தேதிகளில் தினசரி காலை 9 மணி தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.
மாநாட்டு நிகழ்ச்சிகளை செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பக்தா்கள், பொதுமக்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் காண ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.