எம்ஜிஆா் நினைவு நாள்
எம்ஜிஆா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது படத்துக்கு தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, கலைப் பிரிவு மாவட்டச் செயலா் எல்.என்.துரை, பூண்டிஜீவா, தென்பள்ளிபட்டு ஊராட்சி மன்றத் தலைவா் தரணி பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினா் மாதூரி இளங்கோ, ஏழுமலை, குமரன், ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.