முகப்பு
திருவண்ணாமலை

மா்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் பலி

திருவண்ணாமலை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதி ஆனானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயா (40). இவா், தனக்குச் சொந்தமான ஆடுகளை புதன்கிழமை இரவு கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றாா். வியாழக்கிழமை அதிகாலை கொட்டகையிலிருந்து ஆடுகளின் சப்தம் கேட்டதாம்.

கொட்டகைக்குச் சென்று பாா்த்தபோது 15 ஆடுகள் கழுத்துப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தன.

தகவலறிந்த வருவாய்த் துறை, கால்நடைத் துறை அதிகாரிகள் சென்று விசாரித்தனா். மா்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.