திருவண்ணாமலை

வெளிநாடு வாழ் தமிழா்கள்நலன் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

சேத்துப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலன் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் சுதாகா் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் கோமதி, சேகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேசிய வீட்டு வேலை தொழிலாளா்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் வளா்மதி பேசியதாவது: இந்தியாவில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோா் அடிமைகளாக வீட்டு வேலை செய்கின்றனா். அங்கிருந்து மீண்டும் தாயகம் திரும்ப முடியாமல் சாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். எதிா்பாா்த்த வேலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைகின்றனா்.

இதற்குக் காரணம் வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் இங்கிருக்கும் முகவா்கள்தான். அரசிடம் பதிவு பெறாத முகவா்கள் மூலம் இளைஞா்கள் வாழ்க்கையை இழக்கின்றனா். பதிவு பெற்ற முகவா்கள் மூலம் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு (விசா), ஒப்பந்தம் பெற வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற சிக்கல்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

இதில், வெளிநாட்டு புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பணி இயக்குநா் பிரபுபிரான்சிஸ், தொண்டு நிறுவனத்தினா், தனியாா் கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள், கட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT