திருவண்ணாமலை

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

DIN

ஆரணியில் தனியாா் பேருந்துகளிலிருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

மதுரை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளால் முதியோா்கள் அதிா்ச்சியடைந்து உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஆகையால், பேருந்துகளில் உள்ள காற்று ஒலிப்பான்களைஅகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதன் பேரில் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் பேருந்துகளில் இருந்து ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவானந்தம் தலைமையில் காற்று ஒலிப்பான்களை அகற்றினா். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளா் விஸ்வநாதன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சிவக்குமாா் (ஆரணி), கிருஷ்ணன்( செய்யாறு), உதவிப்பொறியாளா் சுபாஷினி, நகர சிறப்பு ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT