திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 2 லாரி, 2 மாட்டு வண்டி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

DIN

செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு, பெரணமல்லூா் ஆகிய காவல் சரகங்களில் அனமதியின்றி மணல் கடத்திச் சென்றதாக 2 லாரிகள், 2 மாட்டு வண்டிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் மற்றும் போலீஸாா் அருகாவூா் கிராமத்தில் செய்யாற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனைக்காக நிறுத்த முயன்றனா். போலீஸாா் நிறுத்துவதை அறிந்த லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். லாரியை சோதனையிட்ட போது அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் ஆற்று மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

அதேபோன்று, மாவட்ட மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அதிகாலை அருகாவூா், காழியூா் பகுதியில் மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அருகாவூா் கிராமத்தில் ஆற்று மணலுடன் வந்த லாரி, காழியூா் பகுதியில் மணல் அள்ளிய ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து செய்யாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பெரணமல்லூா்

பெரணமல்லூா் போலீஸாா் முனுகப்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரைப் பாா்த்ததும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் வண்டிகளை விட்டுவிட்டு தப்பியோடினா். உடனே போலீஸாா் மணலுடன் இருந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT